26 October 2018

சர்வத்தையும் அன்பாய்


230. Nun danket                        6, 7, 6, 7, 6, 6, 6, 6.

"Now thank we all our God"

1.                     சர்வத்தையும் அன்பாய்
            ஆதரிக்குங் கர்த்தாவை,
                        அநேக நன்மையால்
            ஆட்கொண்ட எம்பிரானை
                        இப்போது ஏகமாய்
                        எல்லாரும் போற்றுவோம்;
                        மா தயை பெற்றதால்
                        நாம் நன்றி சொல்லுவோம்.

2.                     தயாள தேவனே
            நீர் என்றும் பாதுகாரும்;
                        கடாட்சங் காண்பித்து
            நற் சமாதானந் தாரும்;
                        மயங்கும் வேளையில்
                        நீர் அன்பாய் தாங்கிடும்,
                        இம்மை மறுமையில்
                        மெய்ப்பாக்யம் ஈந்திடும்.

3.                     வானாதி வானத்தில்
            என்றென்றும் அரசாளும்
                        த்ரியேக தேவனை
            விண்ணோர், மண்ணோர் எல்லாரும்
                        இப்போதும் எப்போதும்
                        ஆதியில் போலவே
                        புகழ்ந்து ஸ்தோத்திரம்
                        செலுத்துவார்களே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...