கர்த்தர் என் மேய்ப்பரானவர்
206. Baden, Luther 8,
7, 8, 7, 8, 8, 7.
"Der Herr ist mein getrener Hirt"
1. கர்த்தர்
என் மேய்ப்பரானவர்,
நன்றாகக் காக்கிறாரே;
அனைத்தையும் என் ரட்சகர்
அன்பாக ஈகிறாரே,
எல்லாவற்றிலும் உத்தம
தெய்வீக வார்த்தையாகிய
நல் மேய்ச்சல் எனக்குண்டு.
2. ஜீவாற்றின் நல்ல தண்ணீரை
எனக்கு அவர் காட்டி
என் ஆத்துமாவின் தாகத்தை
அதால் நன்றாக ஆற்றி,
தாகம் யேசு என்னப்பட்டதால்
என்னை மிகுந்த நேசத்தால்
நடத்தி ஆண்டுகொள்வார்.
3. ஓர் வேளை ஜோதியின்றியே
நான் மரண கெடியின்
இருண்ட பள்ளத்தாக்கிலே
நடந்தும் அவ்விருளின்
பொல்லாப்புக்கு பயப்படேன்,
நீர் நீட்டும் கோலைப் பற்றுவேன்,
அதே என்னை நடத்தும்.
4. அடியேனுக்கோர் பந்தியை
பகைஞர்க் கெதிராக
வைத்தெண்ணையால் என் சிரசை
மகா கடாட்சமாக
நீர் அபிஷேகஞ் செய்கிறீர்;
அடியேனை நீர் மறவீர்,
என் பாத்திரம் நிரம்பும்.
5. என் ஜீவனுள்ள மட்டுக்கும்
தேவன்பை நான் உணரும்
படியாய் என்னை நன்மையும்
கடாட்சமும் தொடரும்;
கர்த்தாவின் வீட்டில் இங்கேயும்
பிற்பாடு என்றும் அங்கேயும்
நிலைத்துக் கொண்டிருப்பேன்.
Comments
Post a Comment