துள்ளித் துள்ளிப் பாலனே
297. Warnborough, Vienna Madura 7s.
"Children's joy"
1. துள்ளித்
துள்ளிப் பாலனே,
கீதம் பாடிப் பாடியே;
யேசுவண்டை ஓடி வா,
நேசர் அவர் அல்லவா?
2. பெத்லேகேமில் பிறந்தார்,
பெற்றோருக்கு அமைந்தார்;
தீயதான குணங்கள்
உண்டோ? இல்லை, அவரில்.
3. சிறு பிள்ளை நீயும் வா
நெஞ்சை யேசுவுக்குத் தா;
அவர் கையில் ஏந்துவார்;
ஆசீர்வாதம் தருவார்.
4. வாரும், சிறு பாலரே,
அஞ்ச வேண்டாம், நேசரே;
பயம், துக்கம் நீக்குவார்,
கண்ணீர் யாவும் துடைப்பார்.
5. பேதையான பிள்ளையும்
தாழ்ந்த சிந்தையுள்ளோரும்
மோட்ச வீட்டில் நேசராம்
அவர் மூலம் சேரலாம்.
6. பொற் கிரீடம் அவரே
சூட்டுவார் என் தோழரே
தேவதூதரோடு நீர்
கீதம் பாடிப் போற்றுவீர்.
Comments
Post a Comment