என்னிடத்தில் பாலர் யாரும்


295. Bethany, Deerhurst, 

Nettleton                                  8s, 7s, 8l.

"Children's praises"

1.         என்னிடத்தில் பாலர் யாரும்
                        வரவேண்டும் என்கிறார்;
            இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
                        வான ராஜ்யம் அடைவார்,
            என்றுசொல்லி, நேசக்கையில்
                        யேசு ஏந்தி அணைத்தார்;
            பாலர் அவரை உள்ளத்தில்
                        அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2.         “தாவீதின் குமாரனுக்கு
                        ஓசன்னா! மா ஸ்தோத்திரம்”!
            என்று பாடி, சீயோனுக்கு
                        நேரே சென்ற சமயம்
            வாழ்த்தல் செய்தவண்ணம் நாமும்
                        வாழ்த்திப் பாடி, பக்தியாய்
            யேசுவை வணங்கி, என்றும்
                        ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்.

4.         பாலனாய்ப் பிறந்த மீட்பர்
                        ராஜாவாக வருவார்
            கூட வரும் தேவதூதர்
                        மேகமீது தோன்றுவார்;
            நல்லோர், தீயோர் ஏசுவாலே
                        தீர்ப்படையும் நேரத்தில்
            பாலர் போன்ற குணத்தாரே
                        வாழ்வடைவார் மோட்சத்தில்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே