ஏதேனில் ஆதி மணம்


275. St. Alphege                     7s, 6s.

"The voice that breathed o'er Eden"

1.         ஏதேனில் ஆதி மணம்
                        உண்டான நாளிலே
            பிறந்த ஆசீர்வாதம்
                        மாறாதிருக்குமே.

2.         இப்போதும் பக்தியுள்ளோர்
                        விவாகம் தூய்மையாம்;
            மூவர் ப்ரசன்னமாவார்,
                        மும்முறை வாழ்த்துண்டாம்.

3.         ஆதாமுக்கு ஏவாளைக்
                        கொடுத்த பிதாவே,
            இம்மாப்பிள்ளைக் குப்பெண்ணை
                        அளிக்க வாருமே.

4.         இரு தன்மையும் சேர்ந்த
                        கன்னியின் மைந்தனே,
            இவர் இரு கையும்
                        இணைக்க வாருமே.

5.         மெய் மணவாளனான
                        தேவ குமாரர்க்கே
            சபையாம் மனையாளை
                        ஜோடிக்கும் ஆவியே.

6.         நீரும் இந்நேரம் வந்து
                        இவ்விரு பேரையும்
            இணைத்து, அன்பாய் வாழ்த்தி
                        மெய்பாக்கியம் ஈந்திடும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே