ஏழைப்பிள்ளை ஆயினும்
296. Scheffler, Harts,
Innocents 7s.
"God's care"
1. ஏழைப்பிள்ளை
ஆயினும்
கர்த்தர் அன்ன வஸ்த்ரமும்
தந்து என்னைக் காக்கிறார்,
என்னில் நேசம் வைக்கிறார்.
2. நித்திரை விழிப்பிலும்
வேலை செய்யும் போதிலும்
யேசு கூட இருப்பார்,
என்னை நித்தமும் காப்பார்.
3. வானம் ஆளும் ஆண்டவன்
என்னைப் போல பாலகன்
ஆகி, நீதி செய்யவே
ஏழை ரூபெடுத்தாரே.
4. கூடு உண்டு பட்சிக்கு
குழி உண்டு நரிக்கு,
தலை சாய்க்கத் தமக்கே
இடம் இல்லை என்றாரே.
5. இங்கிருக்கு மட்டவர்
என்னை ஆசீர்வதிப்பார்
ஜீவன் போகும் நேரத்தில்,
சேர்த்தக் கொள்வார் மோட்சத்தில்.
Comments
Post a Comment