பூர்வீகத்தில் மெய்ப் பக்தரை


243. Mainzer Boston 

St. Lawrence                                                L.M.

"Holy orders"

1.         பூர்வீகத்தில் மெய்ப் பக்தரை
            தெரிந்துகொண்ட தேவரீர்
            இவ்வேளை வந்தித் தாசரை
            அன்பாக ஆசீர்வதிப்பீர்.

2.         தெரிந்துகொண்ட பக்தர்கள்
            எல்லாத்திசையும் சென்றனர்;
            ஆவி நிறைந்து அவர்கள்
            நற்செய்தி எங்கும் கூறினார்.

3.         இவ்வேளை வந்தித் தாசரை
            தேவாவியாலே நிரப்பும்;
            மேலான ஞான வரத்தை
            அன்பாகத் தந்து நடத்தும்.

4.         அப்போஸ்தலர் விவேகமாய்
            கர்த்தாவின் வாக்கை கூறவே
            விரைந்து போன மேரையாய்
            இத்தாசர் கூறச் செய்யுமே.

5.         ஜெபத்திலும் விழிப்பிலும்
            இடைவிடாமல் நிலைத்தே
            தீவர்த்திபோல இவரும்
            விளங்கச் செய்யும்; யேசுவே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு