25 October 2018

என் மேய்ப்பர் யேசுகிறிஸ்துதான்


208. Dominus regit me                  8s, 7s.

"The king of love my Shepherd is"

1.         என் மேய்ப்பர் யேசுகிறிஸ்துதான்
                        நான் தாழ்ச்சியடையேனே
            ஆட்கொண்டோர் சொந்தமான நான்
                        குறையடைகிலேனே.

2.         ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
                        என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்
            மெய்மன்னாவாம் தம் வார்த்தையால்
                        நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3.         நான் பாதை விட்டு ஓடுங்கால்
                        அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
            தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
                        மகா சந்தோஷங் கொள்வார்.

4.         சா நிழல் பள்ளத்தாக்கிலே
                        நான் போக நேரிட்டாலும்
            உன் அன்பின் கோலைப் பற்றவே
                        அதே என் வழிகாட்டும்.

5.         இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
                        பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
            உம்மாவியால் என் சிரசை
                        தைலா பிஷேகஞ் செய்வீர்.

6.         என் ஆயுள் எல்லாம் என் பாத்ரம்
                        நிரம்பி வழிந்தோடும்;
            ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
                        நிறைந்து பொங்கிப்பாயும்.

7.         என் ஜீவ காலம் முற்றிலும்
                        கடாட்சம் பெற்று வாழ்வேன்;
            கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
                        நான் தங்கிப் பூரிப்பாவேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...