என்தன் ஜீவன் யேசுவே


218. Consecration                                                                 7s.

"Take my life and let it be"

1.         என்தன் ஜீவன், யேசுவே,
            சொந்தமாக ஆளுமே;
            என்தன் கால நேரமும்
            நீர் கையாடி யருளும்.

2.         என்தன் கை பேரன்பினால்
            ஏவப்படும் என்தன் கால்
            பணிசெய்ய விரையும்,
            அழகாக விளங்கும்.

3.         என்தன் நாவு இன்பமாய்
            உம்மைப்பாடவும், என் வாய்
            மீட்பின் செய்தி கூறவும்
            ஏதுவாக்கி யருளும்.

4.         என்தன் ஆஸ்தி, தேவரீர்
            முற்றும் அங்கீகரிப்பீர்;
            புத்தி, கல்வி யாவையும்
            சித்தம்போல் ப்ரயோகியும்.

5.         என்தன் சித்தம் யேசுவே
            ஒப்புவித்து விட்டேனே;
            என்தன் நெஞ்சில் தங்குவீர்,
            அதை நித்தம் ஆளுவீர்.

6.         திருப்பாதம் பற்றினேன்,
            எந்தன் நேசம் ஊற்றினேன்;
            என்னையே சமூலமாய்
            தத்தம் செய்தேன் நித்யமாய்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே