தோழனே உன் ஜீவன் இங்கே


283. Mannheim, Life                                                 8, 7, 8, 7, 4, 7.

"What is your life?"

1.         தோழனே உன் ஜீவன், இங்கே
                   என்றென்றைக்கும் நிற்குமோ?
            தோன்றிப் போகும் புகைபோல்
                        அது நீங்கும் அல்லவா?
                                    ஆயுள் நாளை
                        நீ ஆதாயம் பண்ணிக்கொள்.

2.         இவ்வுலகில் உள்ள பொருள்
                        நிலையாமல் நீங்குமே;
            பரலோக பொக்கிஷங்கள்
                        என்றென்றைக்கும் நிற்குமே;
                                    திடன் கொண்டு
                        அவையே நீ தேடிக்கொள்.

3.         மாந்தர் மேன்மை மேட்டிமைகள்
                        புல்லைப் போல உலர்ந்துபோம்,
            லோகக் கல்வியோசனைகள்
                        சீக்கிரம் ஒழிந்துபோம்;
                                    பெலவானும்
                        பெலனற்றவன் ஆவான்.

4.         தேக சொஸ்தமுள்ளவர்கள்
                        நினையா நேரத்திலே
            இம்மை விட்டுப் போகிறார்கள்;
                        இதை எண்ணி, தோழனே
                                    சாவுக்கென்று
                        பக்தியோடு காத்திரு.

5.         சாவின்மேலே ஜெயங்கொண்ட
                        பாவ நாசர் பாதத்தை
            தஞ்சமென்று வந்தடைந்த
                        ஆத்துமாவின் பயத்தை
                                    அவர் நீக்கி
                        நீங்கா வாழ்வை ஈகுவார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு