ஒரே பேறான மைந்தனை
234. Tallis' Ordinal, (414) C.M.
"Sei Lob und Ehr dem hochest
en..."
1. ஒரே
பேறான மைந்தனை
அருளிச் செய்தவர்,
நன்மைகளால் என் உள்ளத்தை
நிரப்ப வல்லவர்.
2. உபத்திரவத்தின் பாரத்தை
அன்பாக நீக்கினார்;
இலக்கமற்ற பாவத்தை
எண்ணாமல் மன்னித்தார்.
3. கல்போல் உறைந்த நெஞ்சத்தை
கரையப் பண்ணினார்;
என் மனதின் விசாரத்தை
களிப்பாய் மாற்றினார்.
4. இருண்டு கெட்ட புத்தியை
வெளிச்சமாக்கினார்,
பொல்லாங்குக்கான ஏதுவை
அன்பாய் விலக்கினார்.
5. இவ்வளவான நன்மையை
இரங்கிச் செய்தவர்
இடைவிடாத வாழ்த்தலை
அடையப் பாத்திரர்.
6. இதை உணர்ந்தென் நெஞ்சமே
இடைவிடாமலே
இரக்கமுள்ள நாதனை
துதித்தல் ஞாயமே.
Comments
Post a Comment