30 October 2018

வருஷப் பிறப்பாம் இன்று


279. Everton, Deerhurst 

Austria                                   8s, 7s, 8l.

"Hilf, Herr Jessu, lass gelingen"

1.         வருஷப் பிறப்பாம் இன்று
                        புதுப்பக்தியுடனே
            தேவரீரிடத்தில் வந்து
                        வாழ்த்தல் செய்ய யேசுவே
            உம்தன் ஆவியை அளித்து
                        என்னைப் பலப்படுத்தும்,
            அடியேனை ஆதரித்து,
                        வழி காட்டியாய் இரும்.

2.         இது கிருபை பொழியும்
                        வருஷம் ஆகட்டுமேன்;
            என்னில் ஒளி வீசச் செய்யும்!
                        என் அழுக்கை அடியேன்
            முழுவதும் கண்டறிந்து
                        அருவருக்கப் பண்ணும்;
            பாவம் யாவையும் மன்னித்து
                        நற்குணத்தை அளியும்.

3.         நீர் என் அழுகையைக் கண்டு
                        துக்கத்தாலே கலங்கும்
            அடியேனைத் தேற்றல் செய்து
                        திடன் அளித்தருளும்;
            இந்த புது வருஷத்தில்
                        பாவத்துக்கும் கேட்டுக்கும்
            தப்புவித்து, என்னிடத்தில்
                        கிருபை கூர்ந்தருளும்

4.         பூரிப்பாய் இவ்வருஷத்தை
                        நான் முடிக்க என்னை நீர்
            தாங்கி உம்தன் திருக்கையை
                        என்மேல் வைக்கக் கடவீர்;
            வருத்தம் வந்தாலும், உம்மை
                        நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்
            மரித்தாலும், பேரின்பத்தை
                        நான் அடைந்து வாழுவேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...