என் ஜீவன் சுகம் செல்வம்


217. Kocher, Knecht, Argyle                                               7s, 6s.

"In full and glad surrender"

1.         என் ஜீவன், சுகம், செல்வம்
                        ப்ரதிஷ்டை செய்கிறேன்
            உற்சாக பலியாக
                        நான் ஒப்புவிக்கிறேன்.

2.         என் நாதா, அடியேனை
                        நீர் ஏற்றுக்கொள்ளுமே;
            நான் உம்தன் சொந்தமாக
                        எந்நாளும் ஜீவிப்பேன்.

3.         என் நெஞ்சில் நீரே வந்து
                        ப்ரசன்னமாகுவீர்;
            ஏகாதிபதியாக
                        ஆங்காட்சி செய்குவீர்.

4.         நீர் ஆளும், யேசு நாதா
                        என் ராஜாவாயிரும்
            எக்காலும் அடியேனை
                        ஆட்கொண்டு நடத்தும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே