30 October 2018

கிறிஸ்து ராயரே


271. St. Cecilia, Mosely.            6s.

"Thy Kingdom come, O God"

1.         கிறிஸ்து ராயரே,
            வந்தாளுகை செய்யும்;
            வெம் பாவம் நீங்கவே
            செங்கோலைச் செலுத்தும்.

2.         விரோதம் நீங்கியே,
            விண் போல மண்ணிலும்
            தூய்மையும் அன்புமே
            எப்போது செழிக்கும்?

3.         உம் வாக்குக்கேற்றதாய்
            வீண் போரும் பகையும்
            சீர் கேடும் முற்றுமாய்
            எப்போது ஒழியும்?

4.         எழும்பும், கர்த்தாவே,
            வல்லராய் வாருமேன்,
            தாசர் தவித்தோமே,
            வந்தாற்றித் தேற்றுமேன்.

5.         உம் மார்க்கம் நாமமும்
            பலர் பழிக்கின்றார்;
            துர்க் கிரியைப் பலரும்
            நாணாமல் செய்கின்றார்.

6.         பற்பல தேசமும்
            அஞ்ஞானம் மூடிற்றே;
            விண் ஜோதி வீசிடும்,
            மா விடி வெள்ளியே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...