கர்த்தாவே நாங்கள் பூமியில்


204. St. Agnes                   C.M.

"Talk with us, Lord, thyself reval"

1.         கர்த்தாவே, நாங்கள் பூமியில்
                        இருக்கும் நாளில் நீர்
            தேவன்பைக் காட்டி, எங்களில்
                        தரிக்கக்கடவீர்.

2.         உம்மோடு பசி இக்கட்டை
                        எண்ணாமல் மறப்போம்;
            உம்மோடிருக்கில் துன்பத்தை
                        இன்பம் என்றெண்ணுவோம்.

3.         கர்த்தாவே, என்னில் தங்கியே
                        சந்தோஷப்படுத்தும்;
            என் சித்தம் என்றும் உமக்கே
                        இணங்கச் செய்திடும்.

4.         நான் உள்ளமட்டும் நித்தமும்
                        உம்மோடே நடப்பேன்,
            என் செல்வம் நீரே, என்றைக்கும்
                        மகிழ்ந்து பூரிப்பேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே