கர்த்தாவின் தாசரே


261. St. Godric. St. John 

(Havergal), Lenox                     6, 6, 6, 6, 8, 8.

"Blow ye the trumpet, blow"

1.                     கர்த்தாவின் தாசரே,
                        எக்காளம் ஊதுங்கள்;
                        சந்தோஷ செய்தியை
                        எங்கெங்கும் கூறுங்கள்;
            சிறைப்பட்டோரின் மீட்புக்கு
            யூபிலி ஆண்டு வந்தது.

2.                     எல்லார் முன்பாகவும்
                        யேசுவை உயர்த்துங்கள்,
                        அவரே யாவர்க்கும்,
                        ரட்சகர் என்னுங்கள்;
            சிறைப்பட்டோரின் மீட்புக்கு
            யூபிலி ஆண்டு வந்தது.

3.                     மோட்சத்தைப் பாவத்தால்
                        இழந்த மாந்தரே,
                        க்றிஸ்துவின் ரத்தத்தால்
                        மோட்சம் கிடைக்குமே;
            சிறைப்பட்டோரின் மீட்புக்கு
            யூபிலி ஆண்டு வந்தது.

4.                     பாவம் பிசாசுக்கும்
                        சிறைப்பட்டோர்களே,
                        உங்களை ரட்சிக்கும்
                        மீட்பர் நல் யேசுவே;
            சிறைப்பட்டோரின் மீட்புக்கு
            யூபிலி ஆண்டு வந்தது.

5.                     சந்தோஷ செய்தியை
                        எல்லாரும் கேளுங்கள்,
                        அன்போடு யேசுவை
                        இப்போதே சேருங்கள்;
            சிறைப்பட்டோரின் மீட்புக்கு
            யூபிலி ஆண்டு வந்தது.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு