ஆ களி கூர்ந்து பூரித்து


216. Winchester old                                                             C.M.

"Ich singe dir mit Herz und Mund"

          1.          ஆ! களி கூர்ந்து பூரித்து
                                    மகிழ், என் உள்ளமே;
                        அன்புள்ள கர்த்தர் உனது
                                    அநந்த செல்வமே.

            2.         நெஞ்சத்தில் ராவும் பகலும்
                                    விசாரம் ஏன்? இனி
                        உன் சிந்தனை அனைத்தையும்
                                    கர்த்தாவுக் கொப்புவி.

            3.         உன் சிறு வயது முதல்
                                    பராமரித்தாரே;
                        கர்த்தாவால் வெகு மோசங்கள்
                                    விலக்கப்பட்டதே.

            4.         அதாலே நீ கர்த்தாவுக்கு
                                    நற் பிள்ளைக்கேற்றதாய்
                        எப்போதும் கீழ்ப்படிந்திரு
                                    அப்போது வாழ்வாய்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே