மகா இக்கட்டாம் ஆபத்து


312. Elim, Hesperus (Quebec)       L.M.

"Wenn wir in hochsten Nothen..."

1.         மகா இக்கட்டாம் ஆபத்து
            உண்டாகி, எங்கள் மனது
            ஓர் யோசனையும் இன்றியே
            கலங்கி வாடுகின்றதே.

2.         கர்த்தாவே, மனத்தாழ்மையாய்
            உம்மண்டை சேர்ந்து ஏகமாய்
            அடி பணிந்த கெஞ்சுதல்
            அடியாருக்கு ஆறுதல்.

3.         நொறுக்கப்பட்ட நெஞ்சோடே
            வந்தோம் இரங்கும், கர்த்தரே;
            ஆ! கோபமாய் இராதேயும்,
            மன்னிப்பை ஈந்து தற்காரும்.

4.         இக்கட்டில் யேசு மூலமாய்
            மன்றாடினோரைத் தயவாய்
            ரட்சிப்போம் என்று தேவரீர்
            நல்வாக்குத் தத்தம் பண்ணினீர்.

5.         ஆ! எங்கள் மீறுதல்களை
            பாராமல், யேசு க்றிஸ்துவை
            பார்த்தெங்கள் வாதை யாவையும்
            அன்பாக நீக்கியருளும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே