இகத்தின் துக்கம் துன்பம்


290. St. Victor, kocker - St. Alphege                                  7s, 6s.

"Brief life is here our portion"

1.         இகத்தின் துக்கம், துன்பம்,
                   கண்ணீரும் மாறிப்போம்;
            முடிவில்லாத இன்பம்
                        பரத்தில் பெறுவோம்.

2.         இதென்ன நல்ல ஈடு!
                        துன்பத் துக்கின்பமா?
            பரத்தில் நிற்கும் வீடு
                        மரிக்கும் பாவிக்கா?

3.         இப்போது விழிப்போடு
                        போராட்டம் செய்குவோம்,
            விண்ணில் மகிழ்ச்சியோடு
                        பொற் க்ரீடம் சூட்டுவோம்.

4.         இகத்தின் அந்தகார
                        ராக்காலம் நீங்கிப்போம்;
            சிறந்த ஜெயமாக
                        பரத்தில் வாழுவேம்.

5.         என் சொந்த ராஜாவான
                        கர்த்தாவை நோக்குவேன்;
            கடாட்ச ஜோதியான
                        அவரின் பூரிப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு