கர்த்தர் என் பக்கமாகில்


212. St. Theodulph, Aurelia                                     7s, 6s, 8l.

"Ist Gott fur mich, so trete"

1.         கர்த்தர் என் பக்கமாகில்,
                        எனக்குப் பயம் ஏன்?
            உபத்ரவம் உண்டாகில்
                        மன்றாடிக் கெஞ்சுவேன்;
            அப்போதென்மேலே வந்த
                        பொல்லா வினை எல்லாம்
            பலத்த காற்றடித்த
                        துரும்புபோலே ஆம்.

2.         என் நெஞ்சின் அஸ்திபாரம்
                        மேலான கர்த்தரே;
            அதாலே பக்தர் யாரும்
                        திடன் கொள்வார்களே;
            நான் ஏழைப் பலவீனன்,
                        வியாதிப் பட்டோனே;
            அவரில் சொஸ்தம், ஜீவன்
                        சமஸ்தமும் உண்டே.

3.         என் உள்ளமே களிக்கும்,
                        துக்கிக்க வேண்டுமோ?
            கர்த்தர் என் மேல் உதிக்கும்
                        பகலோன் அல்லவோ?
            பரத்தில் வைக்கப்பட்ட
                        ஆனந்த பூரிப்பே
            என் ஆவிக்கு பலத்த
                        திடன் உண்டாக்குமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே