என் இயேசுவே நீர் எத்தனை


249. Esca Viatorum, Purieigh 

Meribah                             8, 8, 6, 8, 8, 6.

"Wie wohi hast du gelabet"

1.         என் யேசுவே, நீர் எத்தனை
            நன்றாகத் தேற்றுந் தயவை
                        இப்போது காண்பித்தீர்!
            மகா உயர்ந்த விதமாய்
            நீர் உம்மைப் பானம் ஊணுமாய்
                        அன்பாக அளித்தீர்.

2.         தெய்வீக அன்பை நினைத்து
            என் நெஞ்சை முற்றும் உமக்கு
                        என்றென்றும் படைப்பேன்;
            இத்திவ்ய முத்ரை பெற்றோனாய்
            உம் ரத்தம் மீட்ட தாசனாய்
                        நான் உம்மைச் சேவிப்பேன்.

3.         இப்பந்தியில் விளங்கினீர்
            மேலான நேசம் காட்டினீர்
                        ஆ! இன்னுந் தேவரீர்
            கடாட்சஞ் செய்து, உம்மிலும்
            நான் தங்க எந்த நேரமும்
                        என் நெஞ்சைத் தாங்குவீர்.

4.         இவ்வண்ணந் தயை காண்பிக்கில்,
            தெளிந்து ஜீவ பாதையில்
                        மலர்ந்தோனாகவே
            உம்மைப் பின்பற்றி, யாவிலும்
            களித்து, எந்தப் போரிலும்
                        நான் வெற்றிக் கொள்வேனே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே