31 October 2018

வெள்ளை அங்கி தரித்து


291. Benevento, Hollingside 

Boulah.                                           7s, 8l

"Who are these in bright array?"

1.         வெள்ளை அங்கி தரித்து
            சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
            தேவனை ஆராதித்து
            பூரிப்போர், களிப்போர் யார்?
            சிலுவையை எடுத்து
            யேசுவின் நிமித்தமே
            யுத்தம் பண்ணிப் பொறுத்து
            நின்றோர் இவர்கள்தானே.

2.         மா துன்பத்திலிருந்து
            வந்து விசுவாசத்தால்
            தேவ நீதி அணிந்து
            சுத்தமானார்; ஆதலால்
            ஓய்வில்லாமல் கர்த்தரை
            கிட்டி நின்று சேவிப்பார்;
            கர்த்தர் சுத்தவான்களை
            சேர்த்து ஆசீர்வதிப்பார்.

3.         அவர் ஜெயங்கொண்டோராய்
            இனி சோதிக்கப்படார்;
            தீமை நீங்கி சுத்தராய்
            பசி தாகம் அறியார்;
            மத்தியான உஷ்ணம்
            இனி படமாட்டாதே;
            அவர்கள் மெய்ப் பாக்கியம்
            வளர்ந்தோங்கும் நித்தமே.

4.         தேவ ஆட்டுக்குட்டியும்
            அவர்களைப் போஷிப்பார்;
            ஜீவ தருக் கனியும்
            ஜீவ நீரும் அளிப்பார்
            துக்கம் துன்பம் ஒழித்து
            குறை யாவும் நீக்குவார்;
            கண்ணீரையும் துடைத்து
            அன்பினால் நிரப்புவார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...