சிலுவை சுமந்தோனாக


221. Deerhurst, Everton 

Polycarp                                    8s, 7s, 8l.

"Jesus I my Cross have taken"

1.         சிலுவை சுமந்தோனாக,
                        இயேசு உம்மைப் பற்றினேன்;
            ஏழைப் பரதேசியாக
                        மோட்ச வீடு நாடுவேன்;
            உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,
                        ஞானம், லோகம்அனைத்தும்
            அற்பகுப்பை என்று எண்ணி
                        வெறுப்பேனே முற்றிலும்.

2.         துஷ்டர் என்னைப் பகைத்தாலும்,
                        நீரே தஞ்சம் ஆகுவீர்;
            கஸ்தி என்ன நேரிட்டாலும்,
                        இனி மேன்மை தருவீர்;
            உமதன்பு என்னைத் தேற்ற
                        துக்கம், பயமில்லையே;
            நாதா, உம்ப்ர சன்னம் நீங்க,
                        இன்பமெல்லாம் துன்பமே.

3.         நெஞ்சமே, விண்மேன்மை நோக்கி
                        பாவம் பயம் அகற்று;
            எந்தக் கஷ்டத்தையும் தாங்கி
                        மீட்பரை நீ பின்பற்று
            திவ்ய அன்பைச் சிந்தை செய்து
                        நித்ய மீட்பை நினையேன்;
            ஆவியின் சகாயம் நம்பு,
                        நெஞ்சமே கலக்கம் ஏன்?

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு