நற்செய்தி மேசியா இதோ


326. Bristol, St. Stephen                                                                  C.M.

"Hark! the glad sound the Saviour Comes."

1.         நற்செய்தி! மேசியா இதோ!
                        ஆவலாய் நோக்குவோம்;
            பற்றோடு ஏற்று ஆன்மாவில்
                        ஆனந்தம் பாடுவோம்.

2.         வல்லோனால் சிறையானோரை
                        வல் சிறை நீக்குவார்
            நில்லாதே எவ்விரோதமும்
                        பொல்லாங்கை மேற்கொள்வார்.

3.         நருங்குண்டோரை ஆற்றியே
                        நலிவை நீக்குவார்;
            பரத்தின் பாக்கிய செல்வத்தால்
                        இரவோர் வாழ்விப்பார்.

4.         ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!
                        சாந்த இவ்வேந்தர்க்கும்;
            இயேசுவின் இன்ப நாமமே
                        பாடுவார் விண்ணோரும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு