26 October 2018

தேவரீரின் சாவினாலே


229. Dismissal, St. Raphael,         6, 7, 8, 7, 4, 7.

"A living sacrifice"

1.         தேவரீரின் சாவினாலே
                   தாழ்ச்சியற்ற ரட்சிப்பு
            நான் அடைந்து கொண்டதாலே
                        நித்தம் என்னை உமக்குப்
                                    பலியாக
                        பூரிப்பாய்ச் செலுத்துவேன்.

2.         சீரில்லாத என்னைப் பார்த்து
                        துஷ்ட பேயின் சக்தியை
            ஜெயமாக நீர் முறித்து
                        நித்ய ஜீவ வாசலை
                                    நீர் திறந்து
                        வைத்ததாலே ஸ்தோத்திரம்.

3.         இப்போ நான் களிப்படைந்து
                        பூர்த்தியாகப் பாடுவேன்;
            என் மாற்றானை நீரே வென்று
                        தாழ்த்தும் போது அடியேன்,
                                    “நீர் என் ராஜா”
                        என்று சொல்லிச் சேவிப்பேன்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...