பாலரே ஓர் நேசருண்டு


293. In memoriam. 

Heslington                              8, 6, 7, 6, 7, 6, 7, 6.

"There's friend for little children"

1.          பாலரே, ஓர் நேசருண்டு
                    விண் மோட்ச வீட்டிலே
            நீங்கா இந்நேசர் அன்பு
                        ஓர் நாளும் குன்றாதே.
            உற்றாரின் நேசம் யாவும்
                        நாட்செல்ல மாறினும்
            இவ்வன்பர் திவ்ய நேசம்
                        மாறாமல் நிலைக்கும்.

2.         பாலரே, ஓர் வீடு உண்டு
                        விண் மோட்ச நாட்டிலே;
            பேர் வாழ்வுண்டாக யேசு
                        அங்கரசாள்வாரே;
            ஒப்பற்ற அந்த வீட்டை
                        நாம் நாட வேண்டாமோ?
            அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
                        ஓர் தாழ்ச்சிதானுண்டோ?

3.         பாலரே ஓர் கிரீடம் உண்டு
                        விண் மோட்ச வீட்டில், நீர்
            நல் மீட்பரின் பேரன்பால்
                        பொற் கிரீடம் அணிவீர்;
            இப்போது மீட்பைப் பெற்று
                        மா நேசர் பின் சென்றார்;
            இவ்வாடா ஜீவ க்ரீடம்
                        அப்போது சூடுவார்.

4.         பாலரே ஓர் கீதம் உண்டு
                        விண் மோட்ச வீட்டிலே,
            மா ஜெய கீதம் பாட
                        ஓர் வீணையும் உண்டே;
            அந்நாட்டின் இன்பம் எல்லாம்
                        நம் மீட்பர்க்குரிமை;
            நீர் அவரிடம் வாரும்;
                        ஈவார் அவ்வின்பத்தை.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு