மேலோக வெற்றி சபையும்


272. Warringtom, Old Hundredth    (424)   L.M.

"The Church triumphant"

1.         மேலோக வெற்றி சபையும்
            பூலோக யுத்த சபையும்
            ஒன்றாகக் கூடிச் சுதனை
            துதித்துப் பாடும் கீர்த்தனை.

2.         ராஜாக்களுக்கு ராஜாவே,
            கிருபாதார பலியே,
            மரித்தெழுந்த தேவரீர்
            செங்கோல் செலுத்தி ஆளுவீர்.

3.         பூமியில் உள்ள தேசத்தோர்,
            பற்பல பாஷை பேசுவோர்,
            எல்லாரையும் ஒன்றாகவே
            இழுத்துக் கொள்வேன் என்றீரே.

4.         கிரேக்கர், யூதர், தீவார்கள்;
            ராஜாக்கள், குடி ஜனங்கள்,
            கற்றோர், கல்லாதோர், யாவரும்
            வந்தும்மைப் போற்றச் செய்திடும்.

5.         பொன், வெள்ளி, முத்து, ரத்னமும்
            எல்லாப் பூலோக மேன்மையும்
            காணிக்கையாக உமக்கே
            செலுத்தப்படும் இயேசுவே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே