மின்னும் வெள்ளங்கி பூண்டு
292. Alford (428) 7, 6, 8, 6, 8l.
"The thousand times ten thousand"
1. மின்னும்
வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற
கூட்டத்தார்
பொன்னகர் வீதி எங்குமே
பண்பாக
நிற்கிறார்;
வெம் பாவம் சாவை எல்லாம்
வென்றே
போர் ஓய்ந்தாரே;
செம் பொன்னாம் வாசல் திறவும்
செல்வார்
இவர் உள்ளே.
2. முழங்கும் அல்லேலூயா
மண்
விண்ணை நிரப்பும்!
விளங்கும் கோடி வீணைகள்
விஜயஞ்
சாற்றிடும்!
சராசரங்கள் யாவும்
சுகிக்கும்
நாள் இதே;
தராதலத்தின் துன்பமும்
தொலைந்து
போயிற்றே!
3. அன்பான நண்பர் கூடி
ஆனந்தம்
அடைவார்;
மாண்பான நேசம் எந்நாளும்
மங்காமல்
வாழுவார்;
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்;
அண்ணலே தஞ்சம், ஆகையால்
அபாயம்
நீங்கிடும்.
4. சிறந்த உம்தன் மீட்பை
சமீபமாக்குமே;
தெரிந்து கொள்ளப்பட்டோரின்
தொகை
நிரப்புமே;
உரைத்த உம்தன் காட்சி
உயர்வில்
காட்டுவீர்
இறைவா, ஏங்குந் தாசர்க்கு
இரங்கி
வருவீர்.
Comments
Post a Comment