மா தூர லோகத்தில்
305. Happy Land 6,
4, 6, 4, 6, 7, 6, 4.
"There is a happy land"
1. மா
தூர லோகத்தில்
ஆனந்தமாய்,
மாசற்ற ஸ்தலத்தில்
மின் ஜோதியாய்
நின்றென்றும் பாடுவார்
யேசுவையே பாடுவார்
கெம்பீரங் கொள்ளுவார்
வானோர்களே.
2. பேரின்ப வாழ்வையே
நாடுங்களேன்;
ஆ! அதில் சேரவே
தாமதம் ஏன்?
நாம் களி கூருவோம்.
பாவம், துக்கம் நீங்குவோம்;
க்றிஸ்துவண்டை தங்குவோம்
என்றென்றுமே.
3. அங்குள்ள யாவரும்
சந்தோஷிப்பார்,
யேசுவின் பாலரும்;
சேர்ந்திருப்பார்;
கீர்த்தி ப்ரதாபராய்,
க்ரீடந் தரித்தோர்களாய்,
தூதாட்கள் தோழராய்,
வாழ்ந்திருப்பார்.
Comments
Post a Comment