மரித்தாரே என் ஆண்டவர்


224. Burford Abridge, Arcadia                     C.M.

"Alast and did my saviour bleed?"

1.         மரித்தாரே என் ஆண்டவர்,
                        சிலுவையில் தானே!
            மரித்தாரே என் ரட்சகர்,
                        ஆ, எனக்காகவே.

2.         மரத்தில் தொங்கி ஜீவனை
                        விட்டார் என் யேசுவே;
            உனக்குத்தான் இப்பலியை
                        கொடுத்தார், பாவியே.

3.         நான் எண்ணி எண்ணிவருகில்
                        என் நேசம் ஊக்கமாய்
            கொழுந்துவிட்டு நெஞ்சத்தில்
                        எரியும் பக்தியாய்.

4.         என் மீட்பர் யேசு க்றிஸ்து தாம்
                        இவ்வருள் செய்தாரே;
            நான் என்ன பதில் செய்யலாம்?
                        தகுதி இல்லையே.

5.         என் தேகம், செல்வம், சுகமும்
                        என் ஜீவன் யாவுமே
            சுகந்த பலியாகவும்
                        படைப்பேன் யேசுவே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே