தீராத தாகத்தால்
248. Quam Dilecta, Dolomite
Chant. 6s.
"I hunger and I thirst"
1. தீராத தாகத்தால்
என்
உள்ளம் தொய்யுதே!
ஆ!
ஜீவ தண்ணீரால்,
தேற்றுமேன்,
யேசுவே.
2. விடாய்த்த
பூமியில்
சகாயம்
செய்யுமேன்;
நீர்
போஷிக்காவிடில்,
திக்கற்றுச்
சாகுவேன்.
3. தெய்வீக
போஜனம்,
மெய்
மன்னா நீர் தாமே;
விண்ணோரின்
அமிர்தம்
தாரும்,
என் நாயனே.
4. மாசற்ற
ரத்தத்தால்,
எம்
பாவம் போக்குவீர்;
மெய்யாம்
ஆகாரத்தால்
என்
நெஞ்சைப் போஷிப்பீர்.
5. மா
திவ்ய ஐக்கியம்
இதால்
உண்டாக்குவீர்,
மேலான
பாக்கியம்
அன்பாக
ஈகுவீர்.
6. இவ்வருட்
பந்தியில்
ப்ரசன்னமாகுமேன்;
என்
ஏழை நெஞ்சத்தில்
நீங்காமல்
தங்குமேன்.
Comments
Post a Comment