எருசலேம் என் ஆலயம்


289. Southwell, Aristides.                                                   C.M.

"Jerusalem my happy home"

1.         எருசலேம் என் ஆலயம்
            ஆசித்த வீடதே;
            நான் அதைக் கண்டு பாக்கியம்
            அடைய வேண்டுமே.

2.         பொன் தளம் போட்ட வீதியில்
            எப்போதுலாவுவேன்?
            பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
            என்றைக்குத் தொழுவேன்?

3.         எந்நாளும் கூட்டமாய்
            நிற்கும் அம்மோட்சத்தார்
            யேசுவைப் போற்றிக் களிப்பாய்
            ஓய்வின்றிப் பாடுவார்.

4.         நானும் அங்குள்ள கூட்டத்தில்
            சேர்ந்தும்மைக் காணவே
            வாஞ்சித்து லோக துன்பத்தில்
            களிப்பேன், யேசுவே.

5.         எருசலேம் என் ஆலயம்
            நான் உன்னில் வாழுவேன்;
            என் ஆவல், என் அடைக்கலம்;
            எப்போ கண்டடைவேன்?

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே