பலத்த தேவ வார்த்தையை


268. Erk, Luther                 6, 7, 8, 7, 8, 8, 7.

"Es woll uns Gott genadig sein"

1.         பலத்த தேவ வார்த்தையை
                   எல்லா இடமுமாக,
            கடாட்சித்து நற்செய்தியை
                        எல்லாருக்குள்ளுமாக
            விளங்கப்பண்ணும், யேசுவே,
            எல்லாரையும் ரட்சிக்கவே
                        பூலோகத்துக்கு வந்தீர்.

2.         கர்த்தாவே பொய் மதங்களை
                        நியாயந் தீர்த்தழித்து,
            மாந்தர்க்கு ஜீவ மார்க்கத்தை
                        அன்பாகவே காண்பித்து,
            எல்லா வகை துன்மார்க்கமும்
            ஒழிந்துபோகச் செய்திடும்;
                        அதற்குப் பாடுபட்டீர்.

3.         கர்த்தாவே, எந்த தேசமும்
                        உமக்குள்ளாவதாக,
            உம்மை எல்லா ஜனங்களும்
                        துதி செய்வார்களாக;
            நீர் மாத்திரம் மெய்த் தேவனே;
            புகழ்ச்சி உமக்கேற்றதே;
                        அதை நீர் ஏற்றுக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே