சிறு மழைத் தூறல்


306. Eudoxia, Now the Day is over 

Little Drops.                         6s, 5s.

"Little drops of water"

1.         சிறு மழைத் தூறல்
            பெரு வெள்ளமாம்;
            சிறு அணுத் திரள்
            பெரும் பூமியாம்.

2.         சிறு நொடி நேரம்
            சேர்ந்து யுகமாம்,
            பல யுகாயுகம்
            ஊழி காலமாம்.

3.         சிறு பனங் கொட்டை
            முளைத் தோங்கியே;
            திரளாக நன்மை
            தரும் உண்மையே.

4.         சிறிதான பாவம்
            தீமை விளைக்கும்;
            சொற்ப உபகாரம்
            நன்மை பயக்கும்.

5.         சிற்றெழுத்துக் கோவை
            செய்யுள் ஆகுமாம்;
            சிறிதான நாவு
            பெரு நெருப்பாம்.

6.         சிறு பிள்ளையாய், நீயும்
            கொஞ்சக் காலத்தில்;
            மோட்சம் சேரக்கூடும்
            யேசு அண்டையில்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு