25 October 2018

இயேசு நாதரே என் சுகிர்தமே


209. Exalation, Haarlem             5, 5, 8, 8, 5, 5.

"Jesus, meine Fruede"

1.                     யேசு நாதரே
                        என் சுகிர்தமே
            நீர் என் பூரிப்பென்றைக்கும்
            உம்மில் பாக்கியம் கிடைக்கும்;
                        உம்மை நோக்குவேன்,
                        என்னைச் சேருமேன்.

2.                     வல்ல சர்ப்பமும்
                        சாவின் தூதரும்
            என்னில் பாய்ந்து சீறினாலும்
            என்னை அழிக்க வந்தாலும்.
                        நான் பயப்படேன்,
                        உம்மால் வெல்லுவேன்.

3.                     தேவரீருக்கு
                        மேன்மை தக்கது;
            உம்முடைய ஜோதியாலே
            நான் ப்ரகாசமானதாலே
                        என்றும் அடியேன்
                        உம்மைப் போற்றுவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...