31 October 2018

ஆ நீதியுள்ள கர்த்தரே

ஞாபா:314

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

314. Maltland: Luther                                                (431)   8, 7, 8, 7, 8, 8, 7.

 

"Ach Herre, du gerechter"

 

1.         ஆ, நீதியுள்ள கர்த்தரே,

                        வயல் வறண்டதாலே

            எச்சீவனும் வதங்கிற்றே;

                        இக்கேடு எங்களாலே

            நடந்த பாவத்தின் பலன்,

            என்றெங்களில் ஒவ்வொருத்தன்

                        துக்கித்துச் செல்வானாக.

 

2.         ஆ, எங்கள் மீறுதல்களை

                        இரக்கமாய் மன்னியும்;

            நீரே அடியார் நம்பிக்கை,

                        சகாயத்தை அளியும்;

            கர்த்தாவே, சுத்த தயவால்

            மழையைத் தந்து அதினால்

                        நிலத்தைப் பூரிப்பாக்கும்.

 

3.         தயாபரா, நீர் உமது

                        நல் வாக்கு நிறைவேற

            காய்ந்து கிடக்கும் பூமிக்கு

                        தண்ணீர் இறைப்பீராக;

            வானுலகாளும் கர்த்தரே,

            மழையை உம்மை அன்றியே

                        ஆர் பெய்யப் பண்ணக்கூடும்?

 

4.         மூச்சற்ற விக்ரகங்களால்

                        கூடாது; தேவரீரே

            வானத்தைத் திருக்கரத்தால்

                        விரித்தீர்; அதில் நீரே

            அளவில்லாமல் ஆள்பவர்,

            நீரே பிதா, நீர் ரட்சகர்,

                        உம்மாலே யாவும் ஆகும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...