லோக ஜீவன் நிலையற்ற
286. Requiem, Evensong
All
Saints 3 8, 7,
8, 7, 7, 7.
"What is life? tis but a vapor"
1. லோக
ஜீவன் நிலையற்ற
புகைக்கு ஒப்பானதே;
வாடிப்போகும் பூவைப்போல
அது மாண்டுபோகுமே;
நெஞ்சமே, பரத்தைப் பார்;
யேசு சாவை ஜெயித்தார்.
2. மோட்ச ஜோதி எண்ணிறந்த
மேன்மையாய்ப் ப்ரகாசிக்கும்;
ஆ! அங்கே வெற்றி சிறந்த
மீட்பர் ஆளுவார் என்றும்;
நெஞ்சமே பரத்தைப் பார்;
யேசு வாசல் திறந்தார்.
3. ஆசனத்தைச் சூழ நிற்கும்
தூதர் கோடாகோடியாய்
அவர் அன்பைப் போற்றி என்றும்
பாடுவார்கள் இன்பமாய்;
நெஞ்சமே, பரத்தைப் பார்;
யேசு உன்னை ரட்சித்தார்.
4. மீட்கப்பட்ட சேனையோடு
நானும் நின்று பாடுவேன்;
என்னை மீட்ட அன்பைப் பார்த்து
மீட்பரை நான் போற்றுவேன்
நெஞ்சமே, பரத்தைப் பார்;
யேசு கரை ஏற்றுவார்.
Comments
Post a Comment