26 October 2018

கருணைத் தேவனே


211. Darwall's 148th  

St. John                                           6, 6, 6, 6, 8, 8.

"God our refuge"

1.                     கருணைத் தேவனே,
                        நான் உம்மை நாடுவேன்;
                        என் அடைக்கலமே,
                        உம்மண்டை ஓடுவேன்;
            என் தஞ்சமே, என் ஜீவனே,
            மா அன்புடன் கண்ணோக்குமேன்.

2.                     பூலோக வாசியாய்
                        சஞ்சாரம் செய்கையில்
                        எப்போதும் தாழ்மையாய்
                        சந்தோஷிப்பேன் உம்மில்
            எத்தொல்லை, துன்பம், விக்கினம்;
            வந்தாலும் நீர் புகலிடம்.

3.                     தேவாவி, ஈய்ந்திடும்
                        மெய் விசுவாசமே;
                        அச்சம் சந்தேகமும்
                        அகலச் செய்யுமே;
            செத்தாலும், ஜீவன் அடைவேன்,
            பிதாவின் வீட்டில் சேருவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...