27 October 2018

விண் கிரீடம் பெறப்போருக்கு


236. St. Matthew, Ellacombe 

All Saints 2                                    C.M.     8l.

"The son of God goes forth to war"

1.         விண் க்ரீடம் பெறப்போருக்கு
                        கிறிஸ்தேசு செல்கின்றார்;
            அவரின் வெற்றிக்கொடிக்கு
                        கீழாகப் போவோன் யார்?
            தன் துக்க பாத்ரம் குடித்து
                        சோராமல் நிற்போன் யார்?
            தன் சிலுவையை எடுத்து
                        அவர் பின் செல்வோன் யார்?

2.         முதலாம் ரத்த சாட்சியாய்
                        மரித்தோன், வானத்தில்
            கர்த்தாவை விசுவாசமாய்
                        கண்ணோக்கித் துன்பத்தில்
            கொலைஞர்க்காக வேண்டிட
                        சண்டாளரால் மாண்டான்
            பகைஞர்க்காக ஜெபிக்க
                        யார் அவன் பின் செல்வான்?

3.         தேவாவி வந்து தங்கின
                        ஈராறு சீஷர்கள்
            மகத்வமாய் விளங்கின
                        நம்பிக்கையுள்ளோர்கள்;
            தீ, துன்பம், வாளைச் சகித்தே
                        சிங்கத்தால் பீறுண்டார்;
            மரிக்கவும் அஞ்சாமலே
                        அவர்போல் செல்வோர் யார்?

4.         சிறந்த சேனாவீரராய்
                        கெம்பீரக் கூட்டத்தார்
            சிங்காசனத்தைச் சூழ்ந்தோராய்
                        கொண்டாடி நிற்கிறார்;
            எப்பாடும் நீங்கி மோட்சத்தை
                        சேர்ந்தோர்போல் நாங்களும்
            உம்மண்டை சேர அருளை,
                        தேவா, கடாட்சியும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...