26 October 2018

கர்த்தா என் நெஞ்சை உமக்கே


213. St. Bernard                     C.M.

"Mein Gott, das Herz ich bring dir"

1.         கர்த்தா என் நெஞ்சை உமக்கே
                        அன்பாய் படைக்கிறேன்;
            விடாத வாஞ்சையுடனே
                        நான் உம்மைத் தேடுவேன்.

2.         நீர் என்னிலே நல் நம்பிக்கை
                        மெய்யன்பும் பூரிப்பும்
            உண்டாகும்படி ஆவியை
                        என்மேல் பொழிந்திடும்.

3.         இவ்வண்ணமாய் நல் ஈவுகள்
                        நீர் தந்து என்னிலும்
            சிறந்த உம்தன் குணங்கள்
                        இலங்க அருளும்.

4.         தேவன்பின் சாயல் தரித்து
                        நன்மையில் வர்த்திப்பேன்;
            உம்மை மென்மேலும் அறிந்து
                        உமக்கொப்பாகுவேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...