30 October 2018

கர்த்தாவே பூதலத்திலே


265. Wareham                    L.M.

"Look down, O God, with pitying..."

1.         கர்த்தாவே, பூதலத்திலே
            உண்டான கேட்டைப் பாருமேன்
            எத்தேசமும் இருளிலே
            இருந்து நீங்கச் செய்யுமேன்.

2.         நீரே மெய்த் தேவன்; மாந்தர்கள்
            வீணான மார்க்கமாகவே
            பொன், வெள்ளி, மண், கல் வீரர்கள்
            தேவர்கள் என்கிறார்களே.

3.         வல்லவரான க்றிஸ்துவே,
            அப்பொய்களை அகற்றுமேன்;
            தெய்வீக வார்த்தையால் நீரே
            துன்மார்க்கத்தை அதட்டுமே.

4.         எல்லாரும் ஏக சித்தமாய்
            மெய்த்தேவனான உம்மையே
            அறிந்து உம்மேல் நேசமாய்
            இருக்கச் செய்யும் கர்த்தரே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...