26 October 2018

பாதை காட்டும் மாயெகோவா


215. Realms of Glory 

Triumph                                          8, 7, 8, 7, 4, 7.

"Guide me, O thou great Jehovah"

1.         பாதை காட்டும், மாயெகோவா
                        பரதேசியான நான்
            பலவீனன், அறிவீனன்,
                        இவ்வுலோகம் காடுதான்;
                                    வானாகாரம்
                        தந்து என்னைப் போஷியும்.

2.         ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
                        நீர் திறந்து தாருமேன்;
            தீபமேக ஸ்தம்பம் காட்டும்
                        வழியில் நடத்துமேன்;
                                    வல்ல மீட்பர்!
                        என்னைத் தாங்கும், இயேசுவே.

3.         சாவின் அந்தகாரம் வந்து
                        என்னை மூடும் நேரத்தில்
            சாவின் மேலும் வெற்றி தந்து,
                        என்னைச் சேரும் மோட்சத்தில்
                                    கீத வாழ்த்தல்
                        உமக்கென்றும் பாடுவேன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...