கர்த்தாவே என் பிறப்பினால்
246. Sohren, Sinai
Luther (417) 8, 7, 8, 7, 8, 8, 7.
"O Gott da ich gar keinen Rat"
1. கர்த்தாவே,
என் பிறப்பினால்
உமக்குத் தூரமான
நான் மீண்டும் விசுவாசத்தால்
உமக்குப் பிள்ளையான
சீர் அடைதல் மா பாக்கியம்;
ஆ, உமக்கென்றும் தோத்திரம்
பிதா, குமாரன், ஆவி!
2. த்ரியேகரான உம்மையே
நான் முழுப் பக்தியாக
பணிந்து உமக்கேற்கவே
நடப்பேன் என்பதாக
நான் பெற்ற ஞானஸ்நானத்தால்
உடன் படிக்கை செய்ததால்
இதை நினைப்பேனாக.
3. பாவத்தைத் தீராப் பகையாய்
என் உள்ளத்தில் பகைப்பேன்
என்றே நான் முழு உண்மையாய்
உமக்கு வாக்குத் தந்தேன்;
பிசாசு மாம்சம் லோகத்தை
நான் வெல்ல நற் சகாயத்தை
அன்பாகவே நீர் தாரும்.
4. நீர் தாரும் தேவ பலத்தால்
துரிச்சைக்கு நான் சாக,
கடன் என்மேல் இருப்பதால்
எந்நாளும் ஊக்கமாக
போராடிச் சிலுவையிலே
அதை அறைந்து போடவே
கர்த்தாவே, பெலன் தாரும்.
Comments
Post a Comment