31 October 2018

விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே


310. St. Philip, troyte's Chant2, Sarum    10, 10, 10, 4.

"For all the saints who from their labours rest"

1.         விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே,
            தம் வேலை முடித்தோர் நிமித்தமே,
            கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோமே,
                        அல்லேலூயா! அல்லேலூயா!

2.         நீர் அவர் கோட்டை, ஆயினீர்
            வெம் போரில் வெற்றி தந்து வாழ்வித்தீர்;
            காரிருளில் மா ஜோதி வீசினீர்,
                        அல்லேலூயா! அல்லேலூயா!

3.         முன் நாளில் பக்தர் நற்போராடியே
            வென்றார்போல் நாங்கள் வீரராகவே
            பொற் க்ரீடம் பெற்றுக்கொள்வோமாகவே.
                        அல்லேலூயா! அல்லேலூயா!

4.         கடூரமான யுத்த கோஷ்டத்தில்
            கெம்பீர கீதம் விண்ணில் கேட்கையில்
            அஞ்சாமல் வீரங்கொள்வோம் நெஞ்சத்தில்
                        அல்லேலூயா! அல்லேலூயா!

5.         செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்;
            மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்;
            சீர் பரதீசில் பாக்யம் அமையும்;
                        அல்லேலூயா! அல்லேலூயா!

6.         அப்பாலே நித்ய பகல் விடியும்;
            வென்றோர்கள் மாட்சியாய் எழும்பவும்,
            க்றிஸ்துவின் ராஜரீகம் எழும்பும்,
                        அல்லேலூயா! அல்லேலூயா!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...