என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே


254. Pavai, Canonbury                     L.M.

"The body and blood of the Lord"

1.         என் மீட்பர் யேசு கிறிஸ்துவே;
            உம் பாதத்தண்டை நிற்கிறேன்;
            திக்கற்ற பிள்ளை கெஞ்சவே,
            தள்ளாமல்சேர்த்துக் கொள்ளுமேன்.

2.         என் க்ரியைகள் எம்மாத்திரம்?
            ப்ரயாசை எல்லாம் விருதா;
            உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
            உண்டாகும் நேச ரட்சகா.

3.         உம்தன் சரீரம் ரத்தமும்
            மெய்ப்பொருள் என்று அறிவேன்;
            உட்கொண்டன்பாய் அருந்தவும்,
            நான் பரவசமாகுவேன்.

4.         மாசற்ற திரு ரத்தத்தை
            கொண்டென்னைச் சுத்திகரியும்;
            மா திவ்ய ஜீவ அப்பத்தை
            என் நெஞ்சத்தில் தந்தருளும்.

5.         என் நாதா உம் சரீரமே
            மேலான திவ்ய போஜனம்;
            மாசற்ற உம்தன் ரத்தமே
            மெய்யான பானபாக்கியம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு