30 October 2018

காலம் தோறும் தயவாக


257. Waltham, All Saints          3, 8, 7, 8, 7, 7, 7.

"We plough the fields and scatter"

1.         காலம் தோறும் தயவாக
                        தேவரீர் அளித்திடும்
            பலவித நன்மைக்காக
                        என்ன ஈடுதான் தகும்?
            எங்கள் வாயும் உள்ளமும்
            என்றும் உம்மைப் போற்றிடும்.

2.         ஏழை மாந்தர்கள் விதையை
                        பூமியில் விதைக்கிறார்;
            கர்த்தரே அன்பாக அதை
                        முளைத்தோங்கச் செய்கிறார்;
            ஏற்ற காலம் மழையும்
            பெய்து பூண்டை நனைக்கும்.

3.         உம்முடைய சித்தத்தாலே
                        காற்று வெயில் வீசுமே;
            நீர் அனுப்பும் பனியாலே
                        பயிர்கள் செழிக்குமே;
            எங்கள் கையின் வேலை நீர்
            சித்தியாகச் செய்கிறீர்.

4.         ஆதலால் மகிழ்ந்து நாங்கள்
                        உம்மை அன்பாய்த் துதிப்போம்
            தாழ்மையோடு உமக்கெங்கள்
                        நெஞ்சத்தையே படைப்போம்;
            தேகம் போஷிப்பிக்கும் நீர்
            ஆவியையும் போஷிப்பீர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...