26 October 2018

உள்ளான தேவ பயமும்


228. Farrant, St. Fulbert.                  C.M.

"I want a principle within"

1.         உள்ளான தேவ பயமும்
                   பாவத்தை வெறுத்து
            எதிர்த்து நிற்கும் குணமும்
                        என் வாஞ்சையானது.

2.         ஆங்காரமும் துராசையும்
                        எழும்பும்போது நான்
            அவை அடக்கும் காரணம்
                        அன்பும் பயமும் தான்.

3.         இனி நான் என்றும் உம்மையே
                        விடாதபடிக்கு
            பிள்ளைக்குத் தகும் பயமே
                        அளியும் எனக்கே.

4.         நான் உம்மை விடும் நேரத்தில்
                        நீர் என்னைக் கண்டியும்,
            மெய் துக்கத்தை என் மனதில்
                        எழுப்பியருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...