ஆதியில் இருளை


143. Fiat luk Moscow.                    6, 6, 4, 6, 6, 6, 4.

"Thou whose almighty word"

1.         ஆதியில் இருளை
            அகற்றி ஒளியைப்
                        படைத்த நீர்
            வேதம் பரம்பவும்
            லோகத்தார் யாவரும்
            அவ்வொளி காணவும்
                        அருள் செய்வீர்.

2.         கருணை சத்தியம்,
            தயவு இரக்கம்
                        நிறைந்த நீர்
            பாவிக்கு ரட்சிப்பை,
            பேதைக்கு ஞானத்தை,
            எல்லார்க்கும் ஒளியை
                        கடாட்சிப்பீர்.

3.         நித்திய ஆவியே
            சத்திய புறாவே!
                        பூரணமாய்த்
            தீமையை நீக்கவும்
            நன்மையை நாட்டவும்
            தாசரைத் தேற்றவும்
                        வாரும் அன்பாய்.

4.         ஞானமும் பெலனும்
            சர்வ ஆனந்தமும்
                        உள்ளவரே!
            கடலைப்போலவும்
            அறிவும் உண்மையும்
            பரம்ப அருளும்
                        த்ரியேகரே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே