நீர் தந்தீர் எனக்காய்


Thy Life was given for me
SS 621.  Thy Life Was Given

349                                                   6, 6, 6, 6, 6, 6

1.         நீர் தந்தீர் எனக்காய்
            உம் உயிர் ரத்தமும்;
            நான் மீட்கப்பட்டோனாய்
            சாகாமல் வாழவும்.
            நீர் தந்தீர் எனக்காய்;
            நான் யாது தந்திட்டேன்!

2.         பின்னிட்டீர் ஆண்டுகள்
            வேதனை துக்கமும்;
            நான் நித்திய நித்தியமாய்
            பேரின்பம் பெறவும்.
            பின்னிட்டீர் எனக்காய்;
            நான் யாது பின்னிட்டேன்?

3.         பிதாவின் விண் வீடும்
            ஆசனமும் விட்டீர்;
            பார் இருள் காட்டிலும்
            தனித்தே அலைந்தீர்.
            நீர் விட்டீர் எனக்காய்;
            நான் யாதெது விட்டேன்?

4.         சொல்லொண்ணா வேதனை
            அகோர கஸ்தியும்
            சகித்தீர் எனக்காய்;
            நரகம் தப்பவும்.
            சகித்தீர் எனக்காய்;
            நான் யாது சகித்தேன்?

5.         கொணர்ந்தீர் எனக்காய்
            விண் வீட்டினின்று,
            மீட்பு சமூலமாய்
            மன்னிப்பு மா அன்பு.
            கொணர்ந்தீர் எனக்காய்;
            நான் யாது கொணர்ந்தேன்?

6.         என் ஜீவன் தருவேன்
            பற்றாசை ஒழித்து;
            உமக்காய் ஜீவிப்பேன்
            யாவுமே சகித்து;
            நீர் தந்தீர் உம்மையே;
            நான் தந்தேன் என்னையே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு