15 October 2018

நீர் திவ்விய வழி இயேசுவே


Thou art the Way by Thee alone
St. James

265                                         C.M.

1.         நீர் திவ்விய வழி, இயேசுவே,
                        நீர் பாவநாசர்தாம்;
            பிதாவிடத்தில் சேர்வதும்
                        உமது மூலமாம்.

2.         நீர் திவ்விய சத்தியம், இயேசுவே,
                        உம் வாக்கு ஞானமாம்;
            என் நெஞ்சில் அதின் ஜோதியால்
                        பிரகாசமும் உண்டாம்.

3.         நீர் திவ்விய ஜீவன், இயேசுவே,
                        வெம் சாவை ஜெயித்தீர்;
            உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
                        சாகாமை ஈகுவீர்.

4.         நீர் வழி, சத்தியம், ஜீவனும்;
                        அவ்வழி செல்லவும்,
            சத்தியம் பற்றி, ஜீவனை
                        அடையவும் செய்யும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...